Thursday, June 3, 2010


உன்னிடம் பேசாத கதைகள்
எதுவும் இல்லை என்னிடம் என்றாலும்!
நினைக்கத்தான் செய்கிறது மனம்
இன்னமும் பேசிகொண்டிருக்க!

Friday, May 28, 2010

மன்னிக்கப்பட்ட முரண்


அம்மா - "தம்பி" என அழைக்கும்போது அக்காவாக உணரமுடியாவிட்டாலும்
அக்கா - "தம்பி" என அழைக்கும்போது உணரமுடிகிறது
அம்மாவைப் போல்!

Friday, January 22, 2010

ஒரு குழந்தையின் கையால் மூடப்பட்டிருக்கும்
பட்டாம்பூச்சியை போன்றது என் காதல்
ஆம் என்ற வார்த்தையால் கொல்லப்படும் எனில்
இல்லை என்றே சொல்கிறேன்
பிழைத்துப்போகட்டும் என் நட்பாவது!