Monday, August 1, 2011


உன் மௌனங்கள் தொலைத்த இடைவெளியில்
கண்டெடுத்திருக்கலாம் என்னை எப்பொழுதேனும்
நீ நீயாக இருக்கும் எல்லா காரணங்களுக்காகவும்
நான் தொலைக்கப்பட்டிருக்கிறேன்
என் அடையாளங்களை!
வெறுமை நிறைந்த அறையில் இரவின் ரணம்
இறுக்கி செல்கிறது நீயற்ற என்னை! எனினும்
பிறிதொரு நாளில் நிகழலாம் அந்த சந்திப்பென
மிச்சம் வைத்திருக்கிறேன் சில வார்த்தைகளையும்
கொஞ்சம் கண்ணீரையும்!