Monday, November 16, 2009

எப்போது உணர்ந்திருப்பேன் நம் காதலை!

உன் சிறுவயது புகைப்படத்தை என்னைத்தவிர
எல்லோரிடமும் நீ காட்டி மகிழ்ந்தபோதா
உன் பெற்றோரிடம் என்னை நண்பன் என்று
அறிமுகப்படுத்த முகம் சுளித்தபோதா
நண்பர்களுடான உரையாடலில் என்னைப்பற்றி
பேசும்போது மட்டும் முகமலர்ந்தபோதா
யாருமற்ற பொழுதில் என்பெயரோடு
உன்பெயரை எழுதி ரசித்தபோதா
எப்போது உணர்ந்தேன் எனத்தெரியவில்லை
என்றாலும் எப்போதும்போல் இருக்கவில்லை நான்
உன் வருகைக்குபின்!

Monday, November 9, 2009

நேசிப்பின் அர்த்தம் பற்றி
வார்த்தைகள் பல இருந்தாலும்
எந்த வார்த்தை சொல்லக்கூடும்
உன் விரல் தொடுதலின்
முழுமையான அர்த்தத்தை!

Wednesday, October 28, 2009

அவள் இருந்திருந்தால்!


அவளின் பிஞ்சுவிரல் பிடித்தே
நடந்து பழகி இருப்பேன்
தொலைதூர பயணத்தில் அவள்
தோள்மீது தூங்கி இருப்பேன்
அவளின் அணைக்கும் சுகம் வேண்டியே
அடி வாங்கிஇருப்பேன் அம்மாவிடம் பலமுறை
கருவறையில் என் பாதுகாப்பை சோதிக்கவே
எனக்குமுன் பிறந்தாளோ என்னவோ
இப்படியல்லாம் நினைத்து வாழ்ந்திருப்பேன்
"அக்கா" என்றவள் இருந்திருந்தால்!

Sunday, October 25, 2009

இருத்தலை உணர்த்தும்

இதயத்துடிப்பின் ஓசை கேட்கிறேன்

யாரோ உன்பேர் சொல்லி

யாரையோ அழைக்கும்போது!