Monday, November 16, 2009

எப்போது உணர்ந்திருப்பேன் நம் காதலை!

உன் சிறுவயது புகைப்படத்தை என்னைத்தவிர
எல்லோரிடமும் நீ காட்டி மகிழ்ந்தபோதா
உன் பெற்றோரிடம் என்னை நண்பன் என்று
அறிமுகப்படுத்த முகம் சுளித்தபோதா
நண்பர்களுடான உரையாடலில் என்னைப்பற்றி
பேசும்போது மட்டும் முகமலர்ந்தபோதா
யாருமற்ற பொழுதில் என்பெயரோடு
உன்பெயரை எழுதி ரசித்தபோதா
எப்போது உணர்ந்தேன் எனத்தெரியவில்லை
என்றாலும் எப்போதும்போல் இருக்கவில்லை நான்
உன் வருகைக்குபின்!

1 comment: