Wednesday, October 28, 2009

அவள் இருந்திருந்தால்!


அவளின் பிஞ்சுவிரல் பிடித்தே
நடந்து பழகி இருப்பேன்
தொலைதூர பயணத்தில் அவள்
தோள்மீது தூங்கி இருப்பேன்
அவளின் அணைக்கும் சுகம் வேண்டியே
அடி வாங்கிஇருப்பேன் அம்மாவிடம் பலமுறை
கருவறையில் என் பாதுகாப்பை சோதிக்கவே
எனக்குமுன் பிறந்தாளோ என்னவோ
இப்படியல்லாம் நினைத்து வாழ்ந்திருப்பேன்
"அக்கா" என்றவள் இருந்திருந்தால்!

2 comments:

  1. கருவறையில் என் பாதுகாப்பை சோதிக்கவே
    எனக்குமுன் பிறந்தாளோ என்னவோ இந்த வரியில் உன் சிந்தனை பிரமாதம்

    ReplyDelete
  2. நண்பருக்கு அக்கா இல்லையோ?

    ReplyDelete